திருக்குவளை தாலுகாவிற்கு தனி நீதிமன்றம் மற்றும் நாகையில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட நான்கு கட்டிடங்களை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிஅரசர் டி.ராஜா திறந்து வைத்தார்.


திருக்குவளை மாவட்ட ஒருங்கிணைந்த குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்றது. முன்னதாக நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சோழர்கால புகழ்பெற்ற சூடாமணி விஹாகரத்தை அமைச்சர் ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.




அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா தெரிவிக்கும் போது: நாகப்பட்டினம் சிறந்த மாநகரமாக திகழ்ந்துள்ளதற்கு நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளது. நாகப்பட்டினம் நீதிமன்றம் அமைந்துள்ள வளாகத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கிய புத்தக விகார் அமைந்துள்ளது. இங்குள்ள சூடாமணி விஹார் வெளிநாட்டில் இருந்து நாகப்பட்டினம் வந்து வணிகம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதே போல் சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்தர் பிறந்த மண். தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கிய மறைமலைஅடிகளார் பிறந்த மண் என நாகப்பட்டினத்திற்கு நிறைய பெருமை உள்ளது. இந்த நாகப்பட்டினம் மண்ணில் திருக்குவளையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உட்பட 4 நீதிமன்றங்கள் திறப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருக்குவளை நீதிமன்றத்தில் 209 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும்.




இளம் வக்கீல்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற 4 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நேரம், காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உயர நேரம், காலம் பார்க்க கூடாது. நிறைய படிக்க வேண்டும். எந்த புத்தகத்தையும் ஒதுக்க கூடாது. படிக்க, படிக்க தான் அறிவு வளரும். அதே போல் நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். மூத்த வக்கீல்கள் வாதாடுவதை கேட்க வேண்டும். ஒவ்வொரு வக்கீல்களும் தனது திறமைக்கு ஏற்ப வாதாடுவார்கள். இதை இளம் வக்கீல்கள் பார்க்க பார்க்க நிறைய கருத்துக்களை கற்று கொள்ள முடியும். சக வக்கீல்களுடன் சண்டை போடுவதை விட்டு சகோதரர்களாக பழக வேண்டும். எல்லா வக்கீல்களிடம் அன்புடன் பழக வேண்டும். மரியாதையுடன் பேச வேண்டும். தமிழ்மொழியுடன் ஆங்கில மொழியையும் கற்று கொள்ள வேண்டும். ஆங்கில மொழி உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் போது பயன்தரும். இளம் வக்கீல்கள் தன்னிடம் வரும் வழக்குகளை முழுமையாக படிக்க வேண்டும். அப்பொழுது தான் நீதிமன்றத்தில் திறமையாக வாதாட முடியும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண