நாகை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் கீவலூர், பெருங்கடம்பனூர், வேளாங்கண்ணி, கீழையூர், திருப்பூண்டி, திருக்குவளை, திட்டச்சேரி திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்,இதேபோல் உள்நோயாளிகளாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்களாக குடிநீர் மற்றும் கழிவறையில் சீரான தண்ணீர் வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது, இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டின் கழிவறையில் தண்ணீர் வராததால் பெரும் அவதிக்கு உள்ளானவர்கள் பேருந்து நிலையம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள கட்டண கழிவறைக்கு இயற்கை உபாதையை கழித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்ததாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் நடக்க முடியாத நோயாளிகள் இயற்கை உபாதை கழிப்பதில் பெரும் அவருக்கு உள்ளானதாகவும் அவர்களுக்கு உடன் இருந்த உறவினர்கள் விலை கொடுத்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கி கொண்டு வந்து கழிவறைக்கு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையோடு இருகரம் கூப்பி உடனடியாக தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதனிடம் கேட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் மருத்துவ நிர்வாகம் எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றபோது ஒரு மணி நேரத்தில் தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து மருத்துவர் நிர்வாகத்திடம் தண்ணீர் வருவதை உறுதிப்படுத்த உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக தண்ணீர் பேரலில்தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் தட்டுப்பாடின்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் வருவது உறுதி செய்ய வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது.