கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. நாகை மாவட்டம் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கடலில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை கடல் காற்றுகடலில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசக் கூடும் என்பதால் நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது எனவும் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினார். உடனடியாக அந்தந்த கிராம தலைவர்கள் செல்போன் மூலமாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர் ஒரு சில படங்களுக்கு தொடர்பு கிடைக்காததால் பிற படகுகளுக்கு தகவல் தெரிவிக்கும் போது வாக்கி டாக்கி மூலம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து கரை திரும்ப அறிவித்தனர். இந்த நிலையில் எட்டாம் தேதியில் இருந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் அவசரகதியில் கரை திரும்பினர் வானிலை மையம் எச்சரிக்கைக்கு முன்பு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பியதால் டீசல் ஐஸ்கட்டி உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்து மீன்பிடிக்க சென்ற நிலையை போதுமான மீன்கள் கிடைக்காமல் கடை திரும்பியதால் படகு ஒன்றுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.

 



 

 

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்து உருவான காரணத்தால் இந்திய வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், விழுந்தமாவடி, கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் துறைமுகங்களில் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைத்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். கடல் சீற்றம் தனித்ததையடுத்து மீன்வளத்துறை மூலம் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன வழங்கப்பட்டது.

 

இதனையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். முன்னதாக ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ்கட்டி, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவைகளை சேகரித்த மீனவர்கள் தங்களுக்குப் போதுமான மீன்கள் வலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மேலும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் இலங்கை மீனவர்களால் தாக்குதல் கடல் கொள்ளையர்கள் பிடித்து வைத்திருக்கும் மீனை அச்சுறுத்தி பிடுங்கி செல்வதோடு தங்களது வலைகளையும், ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உள்ளிட்டவைகளை ஆயுதங்களை காட்டி கொள்ளை எடுத்துச் செல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அச்சத்தோடு கடல் தொழில் செய்யும் நிலை நீடித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் கடல் பரப்பில் அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.