தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் 55 கிமீ வரை சூறை காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் கடலுக்குச் செல்லும் டோக்கன்களை நிறுத்தி மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு விடுத்துள்ளார்.இதனால்  அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம்,  நாகூர், நம்பியார்நகர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட 27, கிராமங்களில் கரையில் உள்ள 400 விசை படகு,3000 மேற்பட்ட நாட்டு படகுகள் துறைமுகம் மற்றும் அந்தந்த மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் கரைத்து திரும்பி வரும் நிலையில் நாகை மீன்பிடி இறங்கு தளத்தில் குறைந்த அளவிலான மீன்களை வருவதால் நாகை மாவட்டத்தில் மீன்களின் விலை சற்று ஏற்றமாகவே உள்ளது. கடந்த மாதத்தில் இருந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கரை திரும்ப அறிவுறுத்தப்படுவதால் அவசர கதியில் கரை திரும்பும் மீனவர்கள் போதுமான மீன்கள் பிடிக்காமல் வருவதால் விசைப்படகு ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் தூறல் மலை பெய்து வருகிறது கடல் சீற்றமாக காணப்படுகிறது.