நாகை மாவட்டத்தில் காலை 08:30 மணி வரை கடும் பனிப்பொழிவால் விவசாய நிலங்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போல காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஏறிய விட்டபடியே சென்றனர்.
நாகை மாவட்டத்தில் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8:30 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் சென்றனர்.
நாகூர், வேளாங்கண்ணி, கோடியக்கரை, திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மீக மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களும் பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனம் தெரியாததால் முகப்பு விளக்கு எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும், நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பாக கீழ்வேளூர், கீழையூர்,தேவங்குடி,பாலையூர்,தே வூர்,வெண்மணி, சாட்டியக்குடி, ஆதமங்கலம்,வலிவலம், ஈசனூர், தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்கள் பனி போர்வை போற்றியது போல உள்ளது. இந்த பனிப்பொழிவால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்