“எங்க மாமா இடி உழுந்து இறந்தப்போ யாரும் தூக்க கூடாதுன்னு கட்டளை போடுறாங்க;  சாவுக்கும் வாழ்வுக்கும் போக கூடாதுன்னு அடிக்கிறாங்க, அத நீங்கதான் சரி பன்னனும் கலெக்டர் அய்யா” என நாகை ஆட்சியரிடம் 5ம் வகுப்பு மாணவி புகார் தெரிவித்தார். மாணவியின் பெயர், படிப்பு குறித்து கனிவோடு விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஜானி டாம்வர்கிஸ் உறுதி அளித்தார்.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம்வா்கிஸ் முதல் நாளே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு  செய்வதற்கு சென்றார். அப்போது ஆட்சியருக்காக காத்திருந்த சிறுமி ஒருவர் ஆட்சியருக்கு சால்வை அணிவித்து தான் கொண்டுவந்த மனுவை அளித்தார். தொடர்ந்து நற்பனி கழகம் வைச்சிருக்கவங்க எங்களை வாழ்வுக்கும், சாவுக்கும் எங்களை போக கூடாதுன்னு கட்டளை இடுறாங்க என்றும் எங்க மாமா இடி விழுந்து இறந்தப்போ அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க சாவுக்கும், வாழ்வுக்கும் போக கூடாது அப்டி மீறி போன அடிப்போம்னு சொல்லி அடிப்பதாகவும் அத நீங்கதான் சரி பன்னனும் கலெக்டர் அய்யா என்று மழலை குரலில் கோரிக்கை வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஆட்சியர்  நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தவர், மாணவியிடம் எந்த ஸ்கூல் படிக்கிறிங்க, எத்தனையாவது படிக்கிறிங்க, உங்க பேரன்ன, இப்ப ஸ்கூல் லீவா என்று கனிவோடு விசாரித்தார். 5 ம் வகுப்பு மாணவி வாழ்வுக்கும், சாவுக்கும் போக கூடாதுன்னு கட்டளையிடுறாங்கன்னு ஆட்சியரிடம் புகார் வாசித்தது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில் நற்பனி கழகம் என்ற ஊர் அமைப்பில் இருந்து விலகியதால் சோமசுந்தரம் உள்ளிட்ட 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அந்த குடும்பங்களோடு யாரும் பேச கூடாது என்றும் சொந்த அண்ணன் சாவுக்கு கூட இவர்களை அனுமதிக்காமல் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண