நாகூர் தர்காவில் 465ஆம் ஆண்டு கந்தூரி விழா - கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த சந்தனம் பூசும் வைபவம்

நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் பொதுமக்கள் இன்றி அதிகாலை நடைபெற்றது.

Continues below advertisement
நாகூர் ஆண்டவர் தர்காவின் 465  ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம்  பொதுமக்கள் இன்றி அதிகாலை நடைபெற்றது. புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 13ஆம் தேதி இரவு  நாகையில் இருந்து புறப்பட்டு நாகூர் வந்தடைந்தது. இரவு ஊரடங்கு என்பதால் நாகை மற்றும் நாகூரில் உள்ள தெருக்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் இன்றி சந்தனக்கூடு ஊர்வலம் அலங்கார வாசல் வந்து  அடைந்தது.
 

 
நேற்று அதிகாலை பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். இதை அடுத்து கால் மாட்டு வாசல் வழியாக சந்தனகுடம் தர்கா உள்ளே கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 4:30 மணி அளவில்  போர்டு ஃஆப் டிரஸ்டிகள்  முன்னிலையில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சாகிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தன கூடு ஊர்வலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தர்கா உள்ளே பொது மக்கள் அனுமதிக்காமல்  மிக எளிமையான முறையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,154 கன அடியில் இருந்து 1,926 கன அடியாக குறைந்தது

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்

Continues below advertisement

நாகையில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு நாகூர் வந்தடையும் வரை 7 மணி முதல் 9 மணி வரை நாகூர் மார்க்கம் வழியாக செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் சந்தனக்கூடு விழாவிற்கு நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022| நூற்றாண்டு கடந்த உழவு தொழில் உபகரணங்களை பத்திரமாக பாதுகாத்து வரும் குமரி மாவட்ட விவசாயி

Continues below advertisement