நாகை மாவட்டம் சிக்கல் அருள்மிகு சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டிப் பெருவிழா வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது முருகப்பெருமானுக்கு முத்து முத்தாக வேர்க்கும் மகிமை கண்கொள்ளா காட்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம், கொரணா பரவலை தடுக்க இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான். இந்த போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர் என்பது வரலாறு.சூரனை வதம் செய்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சூரசம் உதாரணமாக முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் விழாவாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள அருள்மிகு நவநீதேஸ்வரர் சுவாமி கோவிலில் முருகன் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார் அருள்மிகு சிக்கல் சிங்கார வேலவர் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றார் என்பது நம்பிக்கை. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் சூரசம்ஹாரத்துக்கு முதல் நாள் நடைபெறும் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியின்போது சிங்காரவேலர் திருமுகத்தில் வியர்வை அரும்பி இருக்கும் இந்த ஆன்மீக அற்புதத்தை காண ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கொரணா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இக்கோவிலில் நடைபெறும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவிக்கையில் சிக்கல் சிங்காரவேலன் கோவில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, 9ம் தேதி நடைபெறும் சூரசம்காரம், 10 தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது இந்த நிகழ்ச்சிகளை https://www.youtube.com// templelivesstream என்று யூட்யூப் முகவரியிலும். www.have.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் பக்தர்கள் நேரலையாக காணலாம் என தெரிவித்தார்.