நாகை மாவட்டத்தில்  27 மீனவ கிராம உள்ளது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கடலுக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் படகு பழுதால் நாகை மீன்பிடி துறைமுகம் அருகே தோணித்துறை ரோட்டில் படகு கட்டுமான தளத்தில் பழுது நீக்குபவர் இந்த தளத்தில் புதிதாக விசைப் படகு கட்டுதல், பழுது நீக்கம் செய்தல், வர்ணம் பூசுதல், என்ஜின் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்  நடைபெற்று வருகிறது. 

 

இங்கு சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த சில வாரங்களுக்கு முன் பழுது நீக்கம் செய்ய கரையில் ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் படகு பழுது நீக்கும் பணி நிறைவு பெற்றதால் இன்று  காடம்பாடி சுனாமி குடியிருப்பு சவேரியார் கோவில் பகுதியை சேர்ந்த  தோமஸ் உள்ளிட்ட  15க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  விசைப்படகினை  கரையிலிருந்து ஆற்றில் இறக்கும் பணியை மேற்கொண்டனர். 



 


'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி


 


அப்போது எதிர்பாராத விதமாக  விசைப்படகு பக்கவாட்டில் சாய்ந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த தோமஸ், கடலூர் மாவட்டம் தண்டலை தைக்கால் தெருவைச் சேர்ந்த  திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா நந்தி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிநாராயணன் ஆகியோர் விசைப்படகில் அடியில் சிக்கிக் கொண்டனர்.





 


குடும்பத்தில் அடுத்தடுத்த உயிரிழப்புகள்; துரத்திய வறுமை - துக்கம் தாளாமல் தந்தை, மகன் தற்கொலை


அப்போது செய்வதறியாது கூச்சலிட்ட சக பணியாளர்களின் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக பொக்லின் இயந்திர உதவியுடன் படகின் அடியில் இருந்த 3 பேரையும்  மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவர்கள் பரிசோதித்ததில் தோமஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் திருச்செல்வம் ஹரிநாராயணன் ஆகியோருக்கு நாகை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.