காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிட கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கரையோர பகுதி கிராமங்களான அளக்குடி, நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ளை மணல், காட்டூர், கீழவாடி, கோபால சமுத்திரம், வடரங்கம், மாதிரி வேலூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள் விளைநிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.




ஐந்தாவது நாளாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளை சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,  கொள்ளிடத்தில் அதிகமாக 1.2 லட்சம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் மும்முறை 2.2 லட்சத்திற்கும் அதிகமான தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்துள்ளது.  இதனால் பாதிப்பு ஏற்பட்டது. மக்களுக்கு எவ்விதமான நஷ்டமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேற்றி அடிப்படை வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் இல்லாத மயிலாடுதுறை மாவட்டத்தில் அதற்கான முயற்சியில் ஆட்சியர் ஈடுபட்டுள்ளார்.




புயல் பாதுகாப்பு மையம் இந்தாண்டு செய்துதர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையை பலப்படுத்த 80 கோடி ரூபாயில் கருங்கல் கொட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து விவசாய பாதிப்பை பார்வையிட துறைசார்ந்த வேளாண்மை துறை அமைச்சர் வரவில்லையை என்ற மக்கள் கோரிக்கை குறித்த கேள்விக்கு அனைத்து அமைச்சர்களும் ஒன்றுதான் என்றும், 115 ஹெக்டேர் பாதிப்பு என்று கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக கணக்கு எடுக்கப்படவில்லை. முழுமையாக கணக்கு எடுத்த பின் நிவாரண குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.




முன்னதாக செய்தியாளர்கள் முன்பு அமைச்சர் ரகுபதியுடன் வந்த சக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியவர், சீர்காழி தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்தின் பெயருக்கு பதிலாக, கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுக எம்எல்ஏ பாரதி என தெரிவித்தார். இதனால் அமைச்சர் அருகில் நின்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்து , அமைச்சரிடம் தனது பெயர் பன்னீர்செல்வம் என காதில் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண