தஞ்சாவூா்: மேகதாது அணை விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய வழங்கப்பட்ட அனுமதியை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி தஞ்சையில் அவரது முழு உருவ சிலை , நினைவு ஆலயம் அமைக்க வேண்டும். நெல்லுக்கு ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஒன்றிய தலைவர்கள் ஜமால் முகமது (திருவையாறு), ரமேஷ் ( அம்மாபேட்டை), அன்பழகன் ( பாபநாசம்), மகேஷ் காளிமுத்து ( பேராவூரணி), ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்தர், திருவையாறு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவழகன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் சசிகுமார், இளைஞரணி தலைவர் ராஜேஷ் கண்ணன், மகளிர் அணி செயலாளர் இந்திரா காந்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் , மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட தலைவர்கள் அரியலூர் தேசிங்கு, மதுரை ராஜு, மயிலாடுதுறை தாமஸ், திருவாரூர் அல்லாபிச்சை, புதுக்கோட்டை வால்மீகி நாதன், கடலூர் கிருபாகரன், திருச்சி தீபன் ராஜ், மாவட்ட செயலாளர் அரியலூர் பிச்சைபிள்ளை , தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்கள் வீராசாமி , சின்ன குஞ்சு, முருக சரவணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது , மருந்து விலை நிர்ணயம் ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் உருவாக்க வேண்டும், சுகாதாரத்திற்காக ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய நிதியை மேலும் உயர்த்த வேண்டும். மத்திய அரசு தொழிலாளர்களான தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக 4 தொகுப்புகளாக மாற்றி முழுமையாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
அரசின் இந்த முடிவு எங்களுடைய எதிர்காலத்தையும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனவே ஒன்றிய அரசு இந்த 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் , மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டமான விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டம் 1976 ஐ மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நாளை சென்னையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மத்திய அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அனைத்து மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.