மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நல்லபாம்பு ஒன்று வேலி ஓரம் இருந்துள்ளது. பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர் மூன்று நாட்களாகியும் பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருந்துள்ளது. இதனால் ஏன் பாம்பு அதே இடத்தில் உள்ளது என அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட் டப்பா மாட்டிக்கொண்டதும், இதனால் இந்தப் பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து இதுகுறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞரான தினேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தினேஷ் பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றினார்.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகும் விஷ பாம்புகளை பாம்பு பிடி இளைஞர் தினேஷ் பிடித்து பாம்புக்கும், மனிதருக்கும் இடையூறு இன்றி அவற்றை வன பகுதிகளில் விட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்