தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு விடிய விடிய  கனமழை பெய்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சீர்காழி தாலுகாவில் 22 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.  இந்நிலையில் நேற்று முன்தினம்  மழை சற்று ஓய்ந்து, அவ்வப்பொழுது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி தாலுகா  பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.




நடவு  மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்து 25 நாட்களே ஆன இந்த பயிர்கள் கடந்த 4 நாட்களாக நீரில் முழ்கி உள்ளதால் செய்வதறியாது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், இந்த பயிர்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கு பொதுப்பணித்துறை மற்றும் அரசு அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வந்தனர். இந்த சூழலில், கொள்ளிடம் ஒன்றியம், சீர்காழி ஒன்றியம், செம்பனார்கோயில் ஒன்றியங்களில்  சம்பா நெற்பயிர்கள் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக சீர்காழி அருகே வேட்டங்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருமுல்லைவாசல், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டனர். 




அப்பொழுது விவசாயிகள் வயலில் இறங்கி பாதிப்படைந்த பயிர்களை கையில் எடுத்து காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா கூட்டாக  சந்தித்தனர். அப்பொழுது, அவர்கள் தெரிவிக்கையில், தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும். பயிர்களில் தேங்கியுள்ள தண்ணீர் முழுமையாக வடிந்தவுடன் பாதிப்பு குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் வேளாண்துறையினர் மூலம்  கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பி வைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.




மயிலாடுதுறையில் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில்  பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 




விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டல செயலாளர் வேலுகுணவேந்தன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை ரியாஸ்கான், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அன்புசெல்வன், ஆனந்த், கனிவளவன், உமாகாந்தன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


EWS Quota: 10% இடஒதுக்கீடு செல்லும்...உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...பாஜக அரசுக்கு வெற்றி