மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் பழமையான சீனிவாசா சுப்புராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 1987 முதல் 90 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அதே ஆண்டில் படித்த சில மாணவர்கள் ஒன்று கூடி. 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரில் படித்த முன்னாள் மாணவர்கள் 33 ஆண்டுகள் பிறகு சந்தித்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று பல்வேறு துறைகளில், துபாய் , சிங்கப்பூர் உள்ளிட்ட அயல்நாடுகள் மற்றும் டெல்லி, மும்பை, சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வந்த முன்னாள் மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தங்கள் கல்லூரியில் சந்திப்பு மேற்கொண்டனர்.1987-1990 ஆம் ஆண்டில் 120 மாணவர்கள் பயின்றுள்ளனர். அவர்களில் தற்போது 60 பேர் இன்றைய நிகழ்ச்சியில் தங்கள் பங்கேற்றுள்ளனர்.
தங்கள் ஆசிரியர்களை அழைத்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து கலந்துரையாடினர். அப்போது, தங்கள், குடும்பத்தை பற்றியும். தங்கள் பணிகளை பற்றியும் உரையாடிய அவர்கள் தங்கள் படித்த கல்லூரியில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கல்லூரிக்கு தேவையான லேப் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஆசிரியர்களிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 1990 இல் உள்ள புகைப்படங்களை டிவியில் திரையில் காண்பித்து பழைய நினைவுகளை ஒருவரை ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக உடன் படித்தவர்கள் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், “கால ஓட்டத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகளில் பல்வேறு திசைகளில் பிரிந்து சென்றுள்ள இந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்று கூடி மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, வேலை, தொழில், குடும்பம் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு அழகியுள்ள தங்களுக்கு இது பெரும் அருமருந்தாக அமைந்தது” என கூறினர்.