மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பெருந்திறள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக,




டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் செவிலியர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், முற்றிலும் பழுதடைந்த துணை மைய கட்டிடத்தில் தங்கியுள்ள செவிலியர்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும், ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையை திரும்ப தர வேண்டும், ஐந்து ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேட் 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆகவும் அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட போடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 


Premature Baby: 540 கிராம் எடையில் பிறந்த குழந்தை; 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை




இந்த சுகாதார செவிலியர்களின் ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் என சுமார் 100 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.