மயிலாடுதுறை  அருகே மொழையூர் ரேஷன் கடையில் சரியான முறையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழசக்கரநல்லூர் ஊராட்சி மொழையூர் கிராமத்தில் மொழையூர் மேலவெளி, மண்தாங்கி உள்ளிட்ட சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த 643 குடும்ப அட்டைகளுக்கான ரேஷன் அங்காடி உள்ளது. இதில் அரசினால் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் விற்கப்படும் சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை கடந்த மூன்று மாதமாக சரிவர வழங்காததைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத சமையல் எண்ணெய்க்கான குறுஞ்செய்தி ஆனது குடும்ப அட்டைதாரர் பதிவு செய்துள்ள செல் எண்ணுக்கு வழங்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளதாகவும், 35 கிலோ வழங்கப்படும் அரிசிதாரருக்கு 30 கிலோ மட்டுமே வழங்கிவிட்டு 35 கிலோ வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளதாகவும் குறைந்த அளவிலான நுகர்வோர்கள் பொருட்கள் வாங்க வந்தால் அன்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படாது என்று ஊழியர்கள் கூறுவதாகவும்,


LIC Kanyadan Policy 2023: பெண் குழந்தைகளே உங்களுக்காக...! எல்ஐசி அறிமுகப்படுத்திய அசத்தல் திட்டம்! சிறப்பம்சங்கள் என்ன?




இதனால் ஆத்திரமடைந்த தாங்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஊழியர்களை கேட்ட பொழுது சுற்றி உள்ள எந்த ரேஷன் கடையிலும்  எண்ணெய் இருப்பு இல்லாததால் வழங்கப்படவில்லை என்று கூறினார். காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் மூன்று நாட்களுக்குள் அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண