மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மெயின்ரோட்டை சேர்ந்தவர் 37 வயதான ஐய்யப்பன். கடற்கரை பகுதிக இவர் பைக்கில் சென்று மீனவர்களிடம் மீன் வாங்கி கொண்டு நகர்பற பகுதிகளில் மீன் விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடித்து தர வேண்டுமென்று பாலையூரில் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.




அது தொடர்பாக ஐய்யப்பன் பாலையூர் காவல்நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த சூழலில் பாலையூர் காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐய்யப்பன் சாராய வியாபாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மீன்வியாபாரம் செய்த என்மீது பாலையூர் காவல்துறையினர் பொய்வழக்கு போட்டதோடு, தொடர்ந்து அதுபோல் வழக்கு பதிவிட்டு என்னை சிரமப்படுத்தி எனது வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். 


12th Exam: பிளஸ் 2 பொதுத் தேர்வு; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்; முறைகேடு செய்த 2 பேர்!




இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஐய்யப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று தன் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றுள்ளார். உடன் அங்கிருந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி ஐய்யப்பன் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி எறிந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அரை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 


Papua New Ginea : பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.3 ரிக்டர் அளவாக பதிவு..




மேலும், இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ஐயய்ப்பன் பெயர் பாலையூர் காவல்நிலைய குற்றவியல் பட்டியலில் உள்ளதாகவும், அதனால் ஐய்யப்பன் மீது குற்றவியல் நடைமுறைசட்டம் போடப்பட்டு கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அதில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்வதாக தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினருக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண