மயிலாடுதுறை தாலுகா நல்லத்துக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் 38 வயதான விவசாயி சக்திவடிவேல். பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக நாற்றுவிட்டு ஆள்களை கொண்டு நடவுசெய்து வந்தவருக்கு, சாகுபடி செலவு அதிகரித்ததால் பெரிய அளவில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டவேண்டுமென்ற நோக்கில் யோசித்த சக்திவடிவேல் டிரம் ஷீடர் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வது குறித்து விபரங்களை அறிந்து டிரம் ஷீடர் இயந்திரம் மூலம் குறுவை சாகுபடி மேற்கொண்டு நல்ல மகசூல் பெற்றுள்ளார். 




அதனையடுத்து தற்போது சம்பா, தாளடி சாகுபடியில் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்திலும் டிரம்ஷீடர் இயந்திரத்தை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்துள்ளார். இதுகுறித்து விவசாயி சக்திவடிவேல் கூறுகையில், நாற்றங்காலில் விதைவிட்டு கூலிஆள்கள் கொண்டு நடவு செய்ய வேண்டுமென்றால் நாற்றுப்பறி, நடவுக் கூலி மட்டுமே ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல்  செலவு செய்ய வேண்டி இருந்தது. ஆள்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் நடவு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.



 


அதனால் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிட்டேன். ஆள்களை கொண்டு விதைப்பு செய்வதைவிட டிரம் ஸீடர் இயந்திரத்தை பயன்படுத்தி நேரடி விதைப்பு செய்வது பற்றி அறிந்துகொண்டு டிரம் ஸீடர், இயந்திரத்தை வாங்கினேன். இதனை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல் இருந்தால் போதுமானது. சரியான இடைவெளியில் விதைநெல் விழுவதால் முளைத்துவந்த பிறகு ஒற்றைப்பட்டம் போட்டு நடவு செய்வது போன்று சரியான இடைவெளிகளில் பயிர் வளர்கிறது இதனால் களை எடுப்பது, உரமிடுவது போன்ற வேலைகள் செய்வதற்கு எந்த இடையூறும் இல்லை. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மயிலாடுதுறை: நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் மலர் - செல்பி எடுத்து பிராத்தனை செய்த பொதுமக்கள்...!


Wமேலும் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தாமல் வேஸ்ட்டிகம்போஸ்டு, மீன்அமிலம், அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டிரீயா, சூடோமோனாஸ் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் செலவு குறைவதோடு நல்ல மகசூலும் கிடைக்கிறது. டிரம்ஸீடர் இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யத்தொடங்கினால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூலுடன் நெல் சாகுபடியில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்றும் அனைத்து விவசாயிகளும் இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.


IPL 2022: சூதாட்ட புகாரால் சிக்கலில் புது ஐபிஎல் அணி.... அதானிக்கு கை மாற வாய்ப்பு?