மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பழவேலங்குடி மேலதெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மனைவி லதா. இவர் வசிக்கும் தெருவில் லதாவின் வீட்டோடு சேர்த்து மொத்தம் மூன்று வீடுகள் உள்ளன. இவர்களது வீட்டுக்கு செல்லும் பாதையை, அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன்கள் ராஜ்குமார், ராஜ்மோகன் மற்றும் ராஜ்செல்வம் ஆகிய 3 பேர் அது தங்களின் பட்டா நிலம் என்று கூறி வேலி வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தெருவில் வசித்து வந்த மற்ற இரண்டு குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சென்று விட்ட நிலையில், லதா குடும்பத்தினர் மட்டும் இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களாக தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர். 




இதுகுறித்து ஏற்கெனவே தரங்கம்பாடி வட்டாட்சியர் விசாரணை நடத்தி வேலியை அகற்ற கேட்டபோது சம்பந்தப்பட்ட ராஜ்குமார் தரப்பினர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் லதா குடும்பத்தினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற லதா குடும்பத்தினரை, ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் நேற்று இரவு வீடு புகுந்து தாக்கியதோடு வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தையும் தூக்கிச் சென்றுள்ளனர். 




இதில் காயமடைந்த சரவணன், ரகுவரன் மற்றும் லதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், லதா, லதாவின் மகன் ரகுவரன் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 4 பேர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டனர். இதையடுத்து, தீக்குளிக்க முயற்சித்த குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கஞ்சா போதையில் வட மாநில இளைஞர் கையில் கத்தியுடன், சாலையின் நடுவே நின்று பொதுமக்களை மிரட்டல்,செல் போன் வீடியோ எடுப்பதை  அறிந்து தெறித்து ஓடிய இளைஞர்! 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை நடுவே வட மாநில இளைஞர் ஒருவர்  கையில் கத்தியுடன் சாலையில் செல்பவர்களை பார்த்து வா பார்த்து கொள்ளளாம், நீ பெரியவனா? நான் பெரியவனா பார்க்கலாம் என கூறி மிரட்டல் விடுத்துள்ளான். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.




தொடர்ந்து அங்கிருந்த சிலர் தங்கள் செல் போனில் அந்த போதை இளைஞரை  வீடியோ எடுத்துள்ளனர். இதனை  பார்த்த அந்த வட மாநில இளைஞர் திடிரென கத்தியுடன் பேருந்து நிலையம் அருகில் உள்ள தெரு பக்கம சென்று மறைந்துள்ளார். செல் போனில் படம் எடுப்பதை கண்டு தலைமுறைவான அந்த போதை இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.