தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகள் குறைத்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை துறை சார்ந்த பல அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த நிவர்த்தி வழிவகை செய்வர். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், ஆகிய நான்கு தாலுக்காவில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.
விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட ஊழியரை உடனடியாக களை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வசூலிக்கப்பட்டால் தற்காலிக பணிநீக்கம் முதல் அனைத்துவித ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் உடனடியாக கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் கரவொலி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.