தமிழ்நாட்டில் முக்கிய பயிராக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முப்போகம் விளைவித்த டெல்டா மாவட்டங்கள் பல்வேறு காரணங்களால் தற்போது ஒரு போக நெல் விளைவிக்கவே பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் போதய மழை இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலை காரணமாக நெல்சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதைய நீர்வரத்து இருந்தும் நெல் சாகுபடி நடைபெற்ற நிலையில் அறுவடையின் போது பெய்த கனமழையால் பல விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். 

Continues below advertisement

இந்நிலையில் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு நெற் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயியும் தங்களது வயல்களில்தான் நெற் பயிர்களை பயிரிட்டு உள்ளோம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் வாங்கி அதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இதனை பெற ஒவ்வொரு பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் தங்கள் நிலத்திற்கு உண்டான சிட்டா அடங்கல் வாங்குவதற்கு விவசாயிகள் குவிந்து வருகின்றனர். 

Continues below advertisement

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த  மாதானம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா சாகுபடிக்கான காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க சிட்டா அடங்கல் பெற படை எடுத்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட  கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் (35). சிட்டா அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளார்.  அவர் பணம் லஞ்சமாக பெறும் இந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அந்த வீடியோவில் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு சிட்டா அடங்கல் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்திருப்பதும், அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சிட்டா அடங்கல் கொடுத்த பிறகு பணத்தை வாங்கி உள்ளே வைப்பதும், தொடர்ந்து கிராம நிர்வாக வரைபடங்கள் அடங்கிய புத்தகங்களை ஒரு பெண்ணிடம்  கொடுப்பதுமான காட்சிகளை விவசாயிகள் தங்களது மொபைலில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

Rajinikanth Meets PM Modi | பிரதமர் மோடியை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்