கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கீழ்கண்டவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். 


TN Cabinet Reshuffle : ‘புத்தாண்டிற்கு பிறகு புதிய அமைச்சரவை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு?’ கலக்கத்தில் சிலர், கனவில் சிலர்..!




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் புத்தாண்டு வழிபாட்டிற்காக கூடும்பட்சத்தில், கொரோனா தொற்று, ஒமைக்ரான் பரவும் அபாயம் உள்ளதால், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த ஒரு கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி  ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு தினத்தன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


Ilayaraja New Year Wishes: ‛காலேஜ் டீனேஜ் பெண்கள்.. எல்லோர்க்கும் என் மீது கண்கள்’ இளையராஜாவின் புதுமை புத்தாண்டு வாழ்த்து!



மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 35 செ.மீ கனமழை


அதேபோன்று, ஹோட்டல்கள் மற்றும் அரங்குகளில் கேளிக்கை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் பொதுமக்கள் முறையாக முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை தவறாது பின்பற்றிட வேண்டும், தவறும் பட்சத்தில் தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சட்டப்படி உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளின்படி கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 11.00 மணி வரை மட்டும் உணவு விடுதிகள் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  லலிதா தெரிவித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர


ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர


யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...