மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை பகுதி கிட்டப்பா பாலம் அருகில் கட்டப்படும் கருமாதி மண்டபத்தின் பணியை பாதியில் தடுத்து நிறுத்தி நகராட்சி இடத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியும், அவருக்கு துணை போகும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். 




அதனைத் தொடர்ந்து போராட்ட குறித்து சுமுக பேச்சு வார்த்தை ஏதும் நடைபெறாததை அடுத்து இன்று நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 150 க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




போராட்டத்தின் போது நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளை சாலையில் தள்ளி, இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியும், சாலையில் உருண்டு பிரண்டு நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.


Udhayanidhi Stalin: பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எங்கள் கோச்..! மு.க.ஸ்டாலின்தான் எங்கள் கேப்டன்..! உதயநிதி கலகல




இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே முக்கிய நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் தொடர்ந்து இன்னும் 10 தினங்களில் மீண்டும் அங்கு பணி தொடங்கும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தார் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


CSIR UGC NET 2023: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண