Manipur Issue: மணிப்பூர் விவகாரம்; ‘ஆயிரம் பேராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்’ - நாகையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் விவகாரத்தில் உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement
மணிப்பூர் பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஆயிரம் பேராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றும், உலக நாடுகள் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் நாகையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
 
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பெரிய அளவில் கலவரம் நடைபெற்று வருகிறது. அந்த கலவரத்தின் போது பழங்குடி பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 நாட்களுகுக்குப் பிறகு சமூக வலை தளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காண்டுமிராண்டித் தனமான செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனங்களையும், போராட்டாங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அவுரித் திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 
அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  சட்ட ஒழுங்கை பாதுகாக்காத மணிப்பூர் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்த அனைவருக்கும் உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கோர செயலில் ஈடுபட்ட கயவர்கள் ஆயிரம் பேராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராகவும் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
Continues below advertisement