தஞ்சாவூர்: தேர்தல் பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிக்கும் குழுக்கள், வீடியோ கண்காணிக்கும் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூல அலுவலக்கங்களில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் மேல் முறையீட்டு குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டது என தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் நிலையான கண்காணிக்கும் குழுக்கள், வீடியோ கண்காணிக்கும் குழுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூல அலுவலக்கங்களில் ஒப்படைக்கப்பட்டது.


தேர்தல்மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தஞ்சாவூர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதி முழுவதும் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென 72 பறக்கும் படைகுழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 




கடந்த 18ம் தேதி தஞசாவூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படைக்குழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில், தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ.83,500, ரூ.100,000, ரூ.1,13,800 மற்றும் ரூ.79.500 பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது. 


தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்களை சமர்பித்து விடுவித்துக்கொள்ள ஏதுவாகவும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மாவட்ட அளவில் தினசரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 60 ஆயிரத்து 120 ரொக்கத்தை பறக்கும் படையினர் நேற்று மருத்துவக்கல்லூரி சாலையில் பறிமுதல் செய்தனர், ர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த குமார் 60,120 ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் மருத்துவக் கல்லூரி சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குமார் உரிய ஆவணம் இன்றி 60,120 ரொக்கத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து பறக்கும்படி அதிகாரிகள் ஒரு இடம் இருந்து பணத்தை மீட்டு தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று இரவு ஒப்படைத்தனர்.