தஞ்சாவூர்: கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும். இதுகுறித்து தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தஞ்சாவூர் ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
என்.நாகராஜன் | 01 Aug 2023 06:55 PM (IST)
ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம்
Published at: 01 Aug 2023 06:55 PM (IST)