தஞ்சாவூர்: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் தேசிய கொடியேற்றினார். 


இதில் தஞ்சை ஒன்றிய துணை பெருந்தலைவர் தோ.அருளானந்தசாமி, வல்லம் நகர திமுக செயலாளர் டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம், பேரூராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், நகர திமுக துணைச்செயலாளர்கள் ராஜா, அமுதா அழகர்சாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ருக்மணி கருப்புசாமி, சேகர், ஜெயராமன், சுந்தர்ராஜ், ஆரோக்கியசாமி, சத்யா ஆறுமுகம், பரிமளா வினோத்குமார், மற்றும் வல்லம் அரசு பொது மருத்துவமனை பல் மருத்துவர் அபிராமி, நகர இளைஞரணி அமைப்பாளர் சேகர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


இதேபோல் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர்  ஜான் பீட்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இவ்வாண்டு பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் பொன்னியின் செல்வி, செம்பக லெட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


அனைத்து அடிப்படை பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கி அவர்களின் பணியைப் பாராட்டி கெளரவம் செய்யப்பட்டது. ஜோதி அறக்கட்டளை சார்பாக கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ மாணவிகளுக்கும் அணி வகுப்பு மேற்கொண்ட மாணவிகளுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.


விழாவில் தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். நண்பகல் நடைப பெற்ற மரக்கன்று நடுவிழாவில் கல்லூரி சமூகக்காடுகள் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தஞ்சாவூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் தேசியக் கொடியை தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் போக்குவரத்து கணேசன், உதவி மாவட்ட அலுவலர் முருகேசன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.


திருவையாறு அடுத்த கண்டியூர் பிரம்மசிரக் கண்டீஸ்வரர் திருக்கோவிலில் 78 வது சுதந்திர தின விழா முன்னிட்டு சம பந்தி போஜனத்தை திமுக ஒன்றிய செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார். அவருடன் கோவில் அறங்காவலர் ராமகிருஷ்ணன், பெருமாள், திருக்கோவில் அறங்காவலர் ராஜேந்திரன், செயல் அலுவலர் பிருந்நா தேவி, கோயில் எழுத்தர்கள், அறங்காவலர் உறுப்பினர்கள், கண்டியூர் ஊராட்சி மன்ற தலைவர், ஏற்பாடுகளை கோயிலில், நிர்வாகம் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உணவருந்தி சென்றார்.