தஞ்சாவூர்: டிகிரி முடித்தவங்களா நீங்க.. அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்கு வந்து இருக்கு. ஆமாங்க. என்ன வேலைவாய்ப்புன்னு பாருங்க. முழு விபரமும் கொடுத்து இருக்கோம்
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டில் 91 உதவி மேலாளர் (Grade A) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பட்டதாரிகள் இந்த அரசு வேலைக்கு வரும் நவம்பர் 30ம் 2025 வரை www.nabard.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நாட்கள் இருக்கு என்று நினைக்காமல் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
அட்டகாசமான பணி வாய்ப்பாக இது உங்களுக்கு அமைந்திருக்கு. நபார்டு எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் (Grade A) பணியிடங்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 91 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த அரசுப்பணியாகும். மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க.
இந்த பணியிடங்கள் பல துறைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பொது பிரிவு 48 இடங்கள், கணக்காளர் (CA) 4 இடங்கள், கம்பெனி செக்ரட்டரி 2 இடங்கள், நிதி பிரிவு 5 இடங்கள், கணினி தொழில்நுட்பம் 10 இடங்கள், பொருளியல் 2 இடங்கள் மற்றும் சட்டம் தொடர்பான பிரிவில் 2 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன யோசனை. சட்டுன்னு இணையத்துக்கு போய் பட்டுன்னு உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
சரி... என்ன கல்வி தகுதி என்கிறீர்களா. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவுக்கான பணிக்காக குறைந்தது 60% மதிப்பெண்கள் அவசியம். முதுகலை பட்டம் (MBA, PGDM போன்றவை) பெற்றவர்கள் 55% மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கலாம். பொறியியல், பொருளியல் போன்ற துறைகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வித் தகுதிகள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை ஊதியம் பெறுவார்கள். அதோடு, அலவன்ஸ் மற்றும் பிற பயன்களும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின்படி ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. பொதுப்பிரிவினர் ரூ.800, ஆனால் SC/ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.150 மட்டும் விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் 8 நவம்பர் 2025 முதல் தொடங்கி இருக்காங்க. கடைசி தேதி 30 நவம்பர் 2025 ஆகும். அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.nabard.org வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பு, குறிப்பாக வங்கி மற்றும் நிர்வாகத் துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம்.
சிறந்த கல்வித் தகுதியும், நிச்சயம் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற முயற்சியுமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவி நிலையான அரசு வேலை வாய்ப்புடன் நிதி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால், இது ஒரு நம்பகமான மற்றும் எதிர்காலம் உறுதியான வேலைவாய்ப்பு எனக் கூறலாம். எனவே மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க. உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். ரெடியாயிட்டீங்களா... சூப்பருங்க. சீக்கிரம் அனுப்பி உங்கள் பணி வாய்ப்பை உறுதி செய்துக்கோங்க.