ஒரத்தூரில் 60 ஏக்கர் பரப்பளவில் 366 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


 

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் இன்று புதியதாக 150 மாணவர்கள் பயிலும் வகையிலான புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் முன்னூறு மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க கூடிய அளவில் பொதுநூலகம் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது இங்கு உள்ள இயல் கூடம் கட்டிடத்தில் உடற்கூறு இயல் துறை, உடல் லியங்கியல் துறை உயிர் வேதியல் துறை மருந்தியல் சமூக மருத்துவத்துறை நுண்ணுயிரியல் துறை நோயியல் துறை தடயவியல் மருத்துவத் துறை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளது.




இதுபோல மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதி மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது மேலும் நிர்வாக அலுவலகம் மற்றும் முதல்வர் குடிப்பதற்கான கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த கல்லூரியில் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.



 

இந்த விழாவில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் நாகை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசு கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நாகை மாலி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் மருத்துவ கல்லூரி டீன் விசுவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.