தஞ்சாவூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வழங்கப்பட்டது.

Continues below advertisement


தமிழக துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கடந்த  27ந் தேதி திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தஞ்சை மத்திய, மாவட்ட மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த  27ம் தேதி பிறந்த 42 பச்சிளம் குழந்தைகளில் 11 பேருக்கு 1 கிராம் தங்க மோதிரமும், 31 பேருக்கு குழந்தைகள் நல பெட்டகமும் வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு மோதிரமும், பரிசு பெட்டகத்தையும் வழங்கினர். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


அதுல்லம் இல்லத்திற்கு அறுசுவை உணவு வழங்கல் 


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தஞ்சை மாநகர மருத்துவக்கல்லூரி பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அதுல்லம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அதுல்லம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு நேற்று காலை அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து முதியோர்களுக்கு உணவு வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பால.சீத்தாராமன், துணை அமைப்பாளர்கள் ரவீந்திரன், பாலசுப்ரமணியன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுதாகர்,  வார்டு செயலாளர்கள் சுரேஷ் ரோச்,  நிமல் பிரசாந்த், விவசாய அணி சுந்தர், மாவட்ட பிரதிநிதி உதேக், வார்டு பிரதிநிதி சொக்கலிங்கம், தொழிலாளர் அணி வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.