மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ளது பழையாறு மீன்பிடி துறைமுகம். இங்கிருந்து பழையாறு மற்றும் சுற்றுவட்டார சிறிய கிராம மீனவர்கள் நாள் தோறும் நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். 

Continues below advertisement

ஆனால், இரண்டு மாதங்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்காத நிலையில், பொதுவாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீனவர் வலையில் கோட்டான் திருக்கை மீன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு கோட்டான் திருக்கை போதிய அளவு கிடைக்கவில்லை. கடந்த பல நாட்களாகவே கோட்டான் திருக்கை மீனவர்கள் வலையில் பிடிபடவில்லை. இந்நிலையில் பழையாறு சேர்ந்த மீனவர் கண்ணையன் என்பவரது வலையில் ஒரே ஒரு ராட்சத கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. 

Continues below advertisement

இதையடுத்து கரை திரும்பிய மீனவர், 100 கிலோ எடையுள்ள இந்த ராட்சத கோட்டான் திருக்கை மீனை மீனாக சமைத்து பெரும்பாலோர் சாப்பிட விரும்பாததால். கருவாட்டு வியாபாரி ஒருவர் 7000 ரூபாய்க்கு வாங்கி அதனை கருவாடாக பதப்படுத்த வாங்கி சென்றார். இந்த வகை மீன் கருவாடாக உலர்த்தப்பட்டு பின்னர் வெளி மாவட்டங்களுக்கும்,வெளி மாநிலங்களுக்கும் எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை கருவாடு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை ஆகும். ஆண்டு தோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும். ஒவ்வொரு மீனும் 6000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை விலைபோகும். சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த மீன்கள் கருவாடாக உலர்த்தப்பட்டு நாமக்கல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலைகளில் அதிகம் சிக்கிய இந்த கோட்டான் திருக்கை இந்தாண்டு ஒன்று, இரண்டு மீன்கள் மற்றுமே கிடைத்து வருகிறது. இதனால் வரத்து குறைவு காரணமாக அதிக விலைக்கு விற்பனை ஆவதால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் ஒன்று,  இரண்டு மீன்கள் இன்றி அதிகளவில் கிடைத்தால் மட்டுமே போதுமான லாபம் கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு கோட்டான் திருக்கை மீன் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் போதிய லாபம் கிடைக்கவில்லை என்றும், இனிவரும் காலங்களில் கோட்டான் திருக்கை மீன் அதிக எண்ணிக்கையில் கிடைத்தால் மீனவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் தெரிவித்துள்ளனர்.