காரைக்கால் நேரு மார்க்கெட்டில் வாழைப்பழங்களை ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நேரு மார்க்கெட்டில் வாழைப்பழங்கள் ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பதாக  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட்டில் வாழைப்பழக் கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அச்சமயம் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன ஸ்ப்ரே அடித்து பழங்களை பழுக்க வைத்தது தெரிய வந்தது. மேலும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமை இல்லாததை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

 



 

கடந்த சில நாட்களாக காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனை எடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரைக்காலுக்கு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாவட்டமான திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாங்கனி திருவிழாவிற்கு பல்லாயிரம் கணக்கானோர் வருகை புரிந்து வருகின்றனர்.

 



 

இந்த நிலையில் வாழைப்பழங்களுக்கும் மாம்பழங்களுக்கும் ரசாயன முறையில் வியாபாரிகள் பழுக்க வைக்கின்றனர் என்று தெரியவந்தது ஆய்வு மேற்கொண்ட உணவுத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சட்டத்திற்கு புறம்பாக பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவிழா காலங்கள் முடியும் வரை உணவுத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட வேண்டும் என காரைக்கால் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.