மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி ஐஏஎஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை மாவட்ட கண்காணிப்பாளர் அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சேராமல் இருக்க வடிகால் வாய்க்கால்களை துரித கதியில் தூர்வாரி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 




அதனைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, ”மயிலாடுதுறை நகரில் நீண்ட கால பிரச்சனையாக உள்ள பாதாள சாக்கடை திட்ட பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி வெள்ள நீர் கடலில் கலக்கும் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு இன்னும் இரண்டு தினங்களில் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், உபரி வெள்ள நீர் 60000 கன அடி வரை கடலில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு இறங்க வேண்டாம் என்றும், குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை  காற்று புகாத தண்ணீரால் சேதமடையாத வகையில் பாலித்தீன் பைகளில் சுற்றி கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாவட்டத்தில் நான்கு இடங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கூடுதலாக தேவைப்பட்டால் பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். 




மேலும், மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானது என்றும், நாய்களை கொல்ல முடியாது என்பதால் அவற்றிற்கு, கருத்தடைப்பு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெருக்களில் விடுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் மக்களை எவ்வாறு காப்பது. தீயணைப்புதுறை வீரர்கள், குளத்து தண்ணீரில் படகில் சென்று தத்ரூப செயல்விளக்கம் செய்தனர்.


வடகிழக்கு பருவமழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு பொது மக்களை காப்பது என்பது குறித்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அக்களுர் நாககுளத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, தண்ணீர் பாட்டில்கள் வாகன டியூப்கள் இவற்றைக் கொண்டு காப்பாற்றுவது அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து செயல் விளக்க காட்சிகள் தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. 




படகில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து அடைமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தற்கான தீயணைப்பு வீரர்கள் மூலம் எவ்வாறு கையாள்வது, கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் தப்பிப்பது எப்படி என்பது பற்றி செயல்விளக்க பயிற்சியை தீயணைப்புவீரர்கள், பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.   நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தீயணைப்புத் துறை அலுவலர் முத்துக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.