மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25 -ஆம் தேதி பூம்புகாரை சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் 38 வயதான மகன் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பைரவகாளி என்ற பெயருடைய விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான சந்திரகுமார், 45 வயதான அஞ்சப்பன், 45 வயதான தமிழ்ச்செல்வன், 25 வயதான நிலவரசன், 40 வயதான கண்ணன், 65 வயதான மாசிலாமணி, 34 வயதான பிரகாஷ், மற்றும் மடத்துகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சித்திரவேல், 40 வயதான சங்கர்,  திருமுல்லைவாசல் கிராமத்தை  சேர்ந்த 23 வயதான கார்த்திக், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயதான மாசிலாமணி, 23 வயதான தேவேந்திரன் உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். 




இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரனின் விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது. இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களின் படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை  காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த  பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை  தேடும் பணியில் ஈடுபட்டனர். 




ஆனால் குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லாததால் விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தை வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றிருக்கலாம் என கருதி  இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து இந்திய கடற்படை சர்வதேச கடல் எல்லையில் படகு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.  இதனை அடுத்து பழுதான படகு மற்றும் மீனவர்களை  மீட்டு அழைத்து வர இந்திய கடற்படை உதவியுடன் பூம்புகாரை சேர்ந்த எட்டு மீனவர்கள் விசை படகில் சென்றுள்ளனர். அவர் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 12 பேரை நாளை காலை மீட்டு வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுக்கடலில் மீனவர்கள் சிக்கி தவித்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.




உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 கால்நடை நிலையங்களில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 


இந்தியாவில் ஆண்டுதோறும் ரேபிஸ் நோய் தாக்கிய நாய்கள் கடிப்பதால் குழந்தைகள் உள்பட சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு (நாய்களுக்கு) ஆண்டுதோறும் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். உலக வெறிநோய் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 41 கால்நடை நிலையங்களிலும் செல்லப்பிராணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.




மயிலாடுதுறை கால்நடை மருந்தக மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில், மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.