குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.


நாகை மாவட்டம் நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் பாஸ்கரன் இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறம் மற்றும் மேற்கு புறத்தில்  மூங்கில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இங்கு  நல்லபாம்பு, சாரைப் பாம்பு, கருநாகம் மற்றும் நட்டுவாக்களி தேள் ஏராளமான உள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது  பாம்புகள் அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைய தொடங்கியுள்ளது. ஒரு வருடத்தில் இப்பகுதியில் சுமார் 17 மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர்.




இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் போது மூங்கில் காட்டில் இருந்து வெளிவந்த நட்டுவாக்கிலே பாஸ்கரின் மனைவி வசந்தியை கடித்தது. இதில் பாதிக்கப்பட்டவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றார். இன்று அங்குள்ள மூங்கில் தோட்டத்தில் இருந்து பாஸ்கரின் குடிசை வீட்டுக்கு சுமார் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு தஞ்சமடைந்தது. இதனைக்கண்ட பாஸ்கரனின் மனைவி வசந்தி அலறியடித்து வெளியே வந்து கூச்சலிட்டார். அப்போது பாம்பு அங்கிருந்து தப்ப முற்பட்டபோது அங்கிருந்த வலையில் சிக்கியது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் 10 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்து பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.


தொடர்ந்து விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சொந்தமான மூங்கில்களை வெட்ட உத்தரவிட்டு தங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண