வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.




இத்தகைய சிறப்பு பெற்ற விழாவை முன்னிட்டு அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு கும்பகோணத்தில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. மாசி மக நாளான பிப்ரவரி 17 ஆம் தேதி கும்பகோணம் மகாமகக் குளம் மேல் கரையில் மாலை 6 மணிக்கு ஆரத்தி பெருவிழா நடைபெறவுள்ளது. சதுர்வேத பாராயணம், சைவ திருமுறைப் பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள், ஜீயர்கள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துறவியர் பெருமக்கள், சாதுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகா ஆரத்தி வழிபாடு நடத்துகின்றனர்.




இதையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜையில் மாசிமக ஆரத்தி பெரு விழா அழைப்பிதழை பேரூர் ஆதீனம் 24 ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103}ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 233 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் சீர்வளர்சீர் சிவராமசாமி அடிகளார், சிவராமாபரம் ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஜ ஜீயர், விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர்  வெளியிட்டனர்.


இதில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா,  மாவட்டப் பொறுப்பாளர் கோரக்ஷனந்த சரஸ்வதி சுவாமிகள், தென் பாரத கும்ப மேளா மகாமக அறக்கட்டளைத் தலைவர் செüமி நாராயணன், செயலர் சத்திய நாராயணன், துணைத் தலைவர் செல்வராஜ், கூடுதல் செயலர் வெங்கட்ராமன், நிர்வாகக் குழு உறுப்பினர் முரளி, தணிகைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நாகையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - பூட்டை உடைக்க முடியாததால் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பின