தஞ்சாவூர்: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், தேசியமயமாக்கலுக்காக காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

Continues below advertisement

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், தேசியமயமாக்கலுக்காக காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேர்வு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள்

Continues below advertisement

தேர்வு: வரும் 24.01.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 31.12.2025 அன்று மாலை 5.45 மணி வரை இணையதளம் (http://www.tncoopsrb.in) வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி (Educational Qualification)

அடிப்படைத் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சி: கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் ஒரு பாடமாக கூட்டுறவுப் பாடம் படித்திருக்க வேண்டும். கணினியைப் பயன்படுத்தும் அடிப்படை அறிவு அவசியம்.

வயது வரம்பு (Age Limit)

பொதுப் பிரிவினர் (OC): அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் SC/ST/MBC/BC/DNC: அதிகபட்ச வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் / முன்னாள் இராணுவத்தினர்: வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அரசு ஊழியர்கள்/கூட்டுறவு ஊழியர்கள்: வயது வரம்பில் தளர்வு இருக்கலாம். தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிகளின்படி, மொத்த காலியிடங்களில் (50) பிரிவுகளின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.

தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

எழுத்துத் தேர்வு (Written Examination): நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதற்கு முன், எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

நேர்முகத் தேர்வு (Interview): எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

பாடத்திட்டம் (Syllabus)

எழுத்துத் தேர்வானது பொதுவாக பின்வரும் பகுதிகளை உள்ளடக்கும்: 

கூட்டுறவுச் சட்டம் மற்றும் வங்கி நடைமுறைகள் (Co-operation and Banking): கூட்டுறவுச் சட்டம், கூட்டுறவு வங்கியியல் கொள்கைகள். 

பொது அறிவு (General Knowledge): நடப்பு நிகழ்வுகள், இந்திய அரசியல், வரலாறு, பொருளாதாரம். எண் திறன் மற்றும் மனத்திறன் (Quantitative Aptitude & Reasoning): கணிதத் திறன், தர்க்க அறிவு. ஆங்கிலம்/தமிழ் மொழித் திறன் (Language Skills): இலக்கணம் மற்றும் மொழிப் பயன்பாடு.

விண்ணப்பக் கட்டணம் பிரிவுக்குப் பிரிவு மாறுபடும் கட்டணத்தை இணையதளம் வழியாக மட்டுமே செலுத்த முடியும். தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விரிவான விவரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் (http://www.tncoopsrb.in) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் உள்ளன.

விண்ணப்பிக்கும் முன், http://www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் உள்ள முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Detailed Notification) அவசியம் படித்து, அதன் அடிப்படையிலேயே விண்ணப்பிக்கவும். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க. அருமையான வாய்ப்பு. உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.