தஞ்சாவூர்: திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Continues below advertisement


திருச்சியில் 1000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது அவர் கூறியதுதான் ஹைலைட்... திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க முயற்சிகள் நடக்கிறது என்றவுடன் கைதட்டல்கள் அதிகரித்தன.


திருச்சி உறையூரில் உள்ள மெத்தடீஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்விக்கு ஊக்கமளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞர் அதைத் தொடரச் செய்தார். தற்போதைய ஆட்சியிலும் அது தொடர்வதாகவும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார்.


திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளிகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி சார்பில் 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடம் தற்போது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுவதாகவும், அங்கு மேல்நிலைப்பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார. விரைவில் திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


கலைஞர் ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதும் சரி திருச்சி மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக திமுக அரசு உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், மிதிவண்டியில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.