நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரைவை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர்  நாகை மருந்து கொத்தள சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மது வாங்கினர். இருவரும் மதுபான கடை அருகிலேயே மருது அருந்தி கொண்டிருக்கும்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஒருவருக்கொருவர் மதுபான பாட்டில்களை தூக்கி எறிந்து தாக்குதல் ஈடுபட்டனர் அப்போது  இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மாரியப்பன் வீசிய மதுபான பாட்டில் குறி தவறாமல் மற்றொரு தரப்பினர் மீது விழுந்ததால்  ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாரியப்பனை பாட்டிலால் வீசி தாக்கியுள்ளனர் அதில் மாரியப்பன் காயமுற்று மயங்கி விழுந்தவரை அங்கு கிடந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.



 

 

இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்த நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஏதேனும் முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது எதர்ச்சியாக ஏற்பட்ட வாய்த்தகராறு அடித்து கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு  சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காவல்துறையினரின் இறந்தவரின் மருத்துவ கல்லூரிக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது இறந்தவரின் நண்பர்கள் காவல்துறையினரின் பணியை துரிதமாக செயல்பட வகையில் இறந்தவரின் முகத்தை பார்க்க ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு பார்க்கச் சென்றனர் அப்போது ஒரு சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினார்.

 




 

உயிரிழந்த மாரியப்பன் மீது கொலை வழக்கு அடிதடி கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளும் உள்ளதால் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் இவர் மீது HS பதிவும் உள்ளது. மேலும் டாஸ்மாக் கடை முன் மது போதையில் இரத்தக் கறைகள் இருந்த மூன்று நபர்களை பிடித்து நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  தப்பியோடியவர்களையும்  போலீசார் தேடி வருகின்றனர். மது வாங்குவதில் ஏற்பட்ட மோதலால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.