பழைய பென்ஷன் திட்டத்தில் திமுக எங்களை ஏமாற்றி விட்டது. கூட்டுறவு ஊழியர் துறை சங்க மாநில தலைவர் சௌந்தராஜன் ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி.

 

தமிழ்நாட்டில் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, என பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டுக்கு முன்னதாக அரசு ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள், பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற பின் பணி காலத்திற்கு பின்பு அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் ஓய்வூதியம் என்பது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசு ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு அந்த பழைய பென்ஷன் திட்டம் ஆனது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் புதிய பென்ஷன் திட்டம் என்பது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் என்பது அரசு ஊழியர்களாக பணியாற்றுபவர்கள் ஊதியத்தில் ஒரு தொகையை பிடித்தம் செய்து அவர்கள் ஓய்வு பெறும் பொழுது அந்தத் தொகையை அவர்களுக்கு  அரசின் சார்பில் திருப்பித் தரப்படும்.

 

அதே நேரத்தில் மாதம் தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படாது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தற்போது முதல்வராக இருக்கக்கூடிய மு.க ஸ்டாலின் அவர்கள், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்துவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் நிதிப்பற்றாக்குறை காரணமாக பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி உள்ளார். இதற்கு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌவுந்தராஜன் திமுக அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதாக ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்றைக்கு சட்டசபையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் அரசிடம் போதிய நிதி இல்லை எனவே புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது வாய்ப்பில்லை என கூறியிருப்பது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோரிக்கை மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அப்பொழுது காணொலி வாயிலாக கலந்துகொண்டு நான் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பயன் பெறத்தக்க அந்த பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறை படுத்துவேன் என கூறினார்கள்.

 

அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை என தெரிந்தும் கூட, இந்த வாக்குறுதியை அளித்ததை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்தோம். இன்னும் சொல்லப்போனால் இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். எனவே அளித்த வாக்குறுதிப்படி தமிழக முதல்வர் அவர்கள் இன்றைக்கு ஏமாற்றத்தில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். 2003ஆம் ஆண்டிலிருந்து 18 ஆண்டு காலமாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்து கொண்டிருந்தோம்.



 

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்து இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடிய மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக ஆட்சி அமைத்த உடனே இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் இன்று நிதிப்பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முப்பத்தி மூன்று ஆண்டுகாலம் பணி செய்ததற்கு பிறகு தான் ஓய்வு பெறுகிறார்கள். இன்றைக்கு அரசுக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் கூடுதல் செலவு மாதம்தோறும் 10 சதவீதம் எங்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு, தமிழக அரசின் நிதி என்பது செலவாகிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அந்த நிதி மிச்சப் படக்கூடிய நிலை உருவாகும். அறுபது ஆண்டுகாலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசாங்கத்தில் பணியாற்றிவிட்டு இன்று அனாதையாக செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது எனவே பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

குறிப்பாக இந்த பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பென்ஷன் என்பது நாங்கள் இறுதியாக வாங்கக்கூடிய ஊதியத்தில் பாதி பென்ஷனாக எங்களுக்கு கிடைக்கும். இதனால் தங்களுடைய இறுதி செலவை செய்வதற்கு இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும். மாதாமாதம் வைத்தியச் செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு இந்த பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்துள்ளோம். படிப்படியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தற்போது நிதியமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்பு தற்காலிய அறிவிப்பாக இருக்க வேண்டுமே தவிர, நிரந்தர ஏமாற்றமாக இருக்கக்கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் ஏபிபி செய்தி நிறுவனத்திடம்  தெரிவித்தார்.