திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் திமுகவினர் என்னுடைய பிறந்த நாளில் பேனர் வைக்கவோ ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் அதனை பொது மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். 




அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இதுநாள் வரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகி உள்ளதை அடுத்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 


அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44 ஆவது பிறந்தநாளை மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா பகுத்தறிவுமன்றத்தில் திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.  இம்முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ( காங்கிரஸ்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால.அருட்செல்வன், ஜெகவீரபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தன்னார்வத்துடன் ரத்த தானம் அளித்தனர்.




இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் மற்றும் சிலம்பாட்டம் போட்டிகள் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நாகை மாவட்ட தலைவர் ஜே.ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து  தமிழர்களின் வீர விளையாட்டை பறைசாற்றும் வகையில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் இணைந்து சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சீர்காழி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் சிவ.சர்மா, நகர தலைவர் தமிழ்ச்செல்வன், சீர்காழி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்