மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராஜராஜ சோழன் சதய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் சார்பில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார். பின்னர் பெரிய கோயில் அருகில் உள்ள மாமனார் ராஜராஜன் சோழன் சிலைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து.செல்வம், மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா கந்தபுனேனி, சதய விழா குழு உதவி ஆணையர் கோ.கவிதா, எம்.எல்ஏ., துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் எஸ் .சி .மேத்தா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சதயவிழா: ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
என்.நாகராஜன் | 03 Nov 2022 01:07 PM (IST)
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published at: 03 Nov 2022 12:27 PM (IST)