தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தது அதற்கான அரசாணையையும் உடனடியாக அரசு வெளியிட்டார். இதற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்து வண்ணம் இருக்கிறது. இந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் மட்டும் எழுந்து நிற்க வேண்டாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதான் புது ட்ரெண்டு.. பிரபலங்களின் வீடு வாசல் வரை ஒரு ட்ரிப்.. யூட்யூபின் புதிய கலாச்சாரம்!
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த உத்தரவுக்கு இந்தியாவின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தருமபுரம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கட்கு நமது நல்லாசிகள். தமிழைப் போற்றும் முகமாக தமிழுக்கு உயர்வளிக்கும் நல்உள்ளத்தோடு சிறந்த அறிவிப்பை அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றும் உயர்வு பெறுவர். தமிழுக்கு ஒல்லும் வகையான் உயர்வளிக்கும் பணி மேலும் தொடர நமது நல்லாசிகள் என அவர்தம் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் என்பது இறைவணக்க பாடல் மட்டுமே என்றும். அது தேசிய கீதம் அல்ல. மேலும் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவேண்டும் என எவ்விதமான சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் உத்தரவுகள் ஏதும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இக்கருத்திற்கு பின் சில நாட்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவித்து அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Watch Video: நாம் தமிழர் கட்சினாலே சிங்கப்பூர் வாழ்நாள் தடை போடுது.. கொதித்து பேசிய சீமான்.!