கி.பி.1614 முதல் 1640 ம் ஆண்டு வரை தஞ்சையை ஆண்டு வந்த நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கர் ராம பக்தராக விளங்கி வந்தார். இவரது அமைச்சரவையில் கோவிந்ததீட்சதர் என்பவரும் பணியாற்றினார். இவரை கோவிந்த அய்யன் என அழைக்கப்பட்டது. சிறந்த நிர்வாகத் திறமையை கொண்டிருந்த இந்த கோவிந்த அய்யனால் கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அய்யன் தெருக்களும், தஞ்சை அருகே அய்யம் பேட்டையும் இவரது பெயரால் அமைந்துள்ளது. ரகுநாத நாயக்கரின் திருக்கோயில்களின் திருப்பணிகளில் கோவிந்த அய்யன் பெரும்பங்காற்றியுள்ளார். கும்பகோணத்தில் மையப் பகுதியில் உள்ள ராமசுவாமி கோயிலை திருப்பணி செய்த மன்னன் ரகுநாத நாயக்கராகும். அதன் நினைவாக அந்த மன்னனின் சிற்பம் கோயில் மண்டபத்தில் ஒரு தூணில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் தாராசுரம் அருகே மன்னர் ஒரு குளத்தை வெட்டியபோது அந்த குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராமன், சீதை ஆகிய சிலைகளை இந்த கோயிலில் வைத்து மன்னர் வழிபட்டு வந்ததாக கூறுவார்கள். கும்பகோணத்தில் உள்ள வைணவத் தலங்களுள் சிறப்பு பெற்றதாகவும், இந்த தலத்தில் ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பதால் தென்னக அயோத்தி எனவும் போற்றப்படுகிறது. இந்த கோயிலின் பிரகாரத்தில் மூலிகைகளை கொண்டு காலத்தாலும் அழிக்க முடியாத வகையில் ராமாயணகாட்சிகள் வரையப்பட்டு இருந்தது.கோயிலின் மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்திலும் சிற்பங்கள் ஏராளமான உள்ளது. ஒவ்வொரு சிற்பங்களும் ஒவ்வொரு  கதையையும், கலையையும் எடுத்து கூறும் வகையில் உள்ளது.




கடந்த 2016 பிப்ரவரி மாதம் 2016 கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடைபெற்றது.   அதனை முன்னிட்டு கும்பாபிஷேகத்திற்காக ரூ 10 லட்சம் திருப்பணி செய்தனா். ஆனால் புதைந்துள்ள சிற்பங்களை கண்டு கொள்ளாமல் கும்பாபிஷேகம் முடிந்தால் போதும் என்று இருந்து விட்டனர். இந்நிலையில், ராமசாமி கோயிலின் அலங்கார மண்டபத்தின் எதிரில் திடிரென கருங்கல்லினாலான மேற்கூரை விரிசல் விட்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது. இதனால் பக்தர்கள், கோயில் அலுவலர்கள், பட்டாச்சாரியார்கள், தினந்தோறும் அச்சத்துடன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இது போன்று ஆபத்தான நிலையில் இருப்பதால், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை குறைந்து வருகின்றது.


தற்போது கருங்கல்லினாலான மேற்கூரை விரிசல் விட்டு வருவதால், இது குறித்து கோயில் நிர்வாகம், இந்திய தொல்லியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, உடனடியாக 1.50 லட்சம் மதிப்பில் இரும்பினாலான பாலங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் போதுமான வருமானமில்லாமல், பணம் இருப்பு இல்லாமல் இருப்பதால், கோயில் நிர்வாகத்தினர், இப்பணியினை எப்படி முடிப்பது என்று வழிதெரியாமல் இருக்கின்றனர். எனவே, கோயில் நிர்வாகத்தினர், பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் மேற்கூரை மேலும் மோசமாகி விடாமல் இருப்பதற்கு போர்கால அடிப்படையில், சீர் செய்யா விட்டால், பெரும் விபரீதம் ஏற்படும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து கோயில் ஊழியர் கூறுகையில்,ராமசாமி கோயில் கட்டப்பட்டு பல நுாறு ஆண்டுகள் ஆகின்றது. கோயிலின் மேற்கூரை அதிகமான பாரத்துடன் இருப்பதால், விரிசல் விட்டுள்ளது. கருங்கல்லினால் அமைக்கப்பட்ட மேற்கூரை சுமார் 20 அடி நீளத்திற்கு, 2 அடி உயரத்திற்கு ஒரே கல்லினால் சுமார் 30க்கும் மேற்பட்ட கருகல்லை வைத்து அமைத்துள்ளனர். நாளுக்கு நாள் கருங்கல்லின் தன்மை மாறி வருவதால் பாரம் தாங்காமல், விரிசல் விட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சில கற்களில் மட்டும் விரிசல் விட்டிருந்தது. பலத்த மழை பெய்தால் விரிசல் விட்டுள்ள பகுதியில் மழை நீர் கசிந்து வடிகிறது. 




தற்போது 15 க்கும் மேற்பட்ட மேற்கூரை கற்களில் விரிசல் விட்டுள்ளது. இது குறித்து தொல்லியயியல் துறையினருக்கு தகவல் கொடுத்தால், உடனடியாக ரூ.1.50 லட்சம் மதிப்பில்  இரும்பினாலான பாலம் அமைத்து முட்டு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் போதுமான நிதி இல்லை என்றால், உபயதாரர் மூலம் நிதி திரட்டி பணிகளை செய்யுங்கள் என்கிறார்கள். கொரோனா தொற்று லாக்டவுன் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், 1.50 லட்சம் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. அதனால் கோயில் நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.


மேலும், விரிசல் விட்டுள்ள பகுதியை அகற்றி விட்டு, மீண்டும் கருங்கல்லினாலான பணிகளை தான் செய்யவேண்டும் என தெல்லியியல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் மேற்கூரை முழுவதும் அகற்றி விட்டு, மீண்டும் கற்கலினால் பணிகளை செய்தால்,சுமார் ரூ.1 கோடி வரை செலவாகும்.எனவே, தமிழக அரசு, உடனடியாக தென்னக அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில் விரிசல் விட்டு வரும் மேற்கூரை சீர் செய்யபோர்கால அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும், தவறும் பட்சத்தில் பெரும் விபரீதம் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.