மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை கொண்டு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட 4 தாலுகாக்களில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி இந்தாண்டு நடைபெற்றது. இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் பல இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்து வருகிறனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.




இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான குறுவை நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக குறைவான நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள  நெல் கொள்முதல் நிலையங்கள் போதாது என்றும் இதனை அதிகரிக்க வேண்டும் என மயிலாடுதுறையில் மாவட்ட விவசாயிகள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்நிலையில் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 சிப்பம்  நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைவான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டு 250 முதல் 500 சிப்பம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி விற்பனை செய்வதற்காக 10 நாட்களுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 


இந்தநிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட பல இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்பொழுது திடீரென இரவு நேரங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்தது. மயிலாடுதுறையை அடுத்த வில்லியநல்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 200 ஏக்கரில் 50 ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் மழையில் நனைந்து வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.




இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தாழஞ்சேரி, கொண்டல், திருவிழுந்தூர், கொற்கை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை பயிர்கள் சாய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து இந்த மழை பெய்தால் சாய்ந்த பயிர்கள் முளைத்துவிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள விவசாயிகள் மேலும் மழை தொடர்ந்தால் பயிர் சேதத்தினை கணக்கிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுருக்குமடி வலையால் கிடுக்குப்பிடி- மயிலாடுதுறை ஆட்சியரை மாறி மாறி சந்திக்கும் மீனவர் குழுக்கள்...!