தஞ்சாவூர்: தஞ்சையில் வரும் 7ம் தேதி நடக்கும் பிரமாண்டமாக சித்திரைத் தேர் திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 7ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம். உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாகவும் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்ந்து வரும் தஞ்சை பெரியக்கோயில் சித்திரை பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை அடுத்து தேர் அலங்காரததிற்கான பந்தல் கால் விழா 29ம் தேதி நடைபெற்றது.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் 7ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த விடுமுறை தினத்தை ஈடுகட்டும் வகையில் வரும் 24.05.2025 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் 7ம் தேதி அனைத்து கருவூலங்களும் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.