காவிரியில் தண்ணீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கொண்டு வந்து கருப்பு பேட்ச் அணிந்து போலீசார் தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பல்லில்லாத ஆணையமாக செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்து நாகையில் காவிரி விவசாயிகள் கூட்டு இயக்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் கையில் ஏந்திய விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து நாகையிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை மதிக்க முயற்சி செய்தனர்.
அப்போது போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி போலீசார் தண்டவாளத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விவசாயிகளை போலீசார் அவமரியாதை செய்வதாக கூறி போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் விவசாயிகளிடம் உறுதி அளித்தார். இதனை அடுத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் காரணமாக கீழ்வேளூரில் பரபரப்பான சூழலை காணப்பட்டது.