சென்னையில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில், தமிழ் தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்து பேசியிருந்தார். 




இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரும், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினரும் பல்வேறு எதிர் எதிர் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு கருத்து மோதலில் ஈடுபட்டு  இதுதொடர்பாக இருதரப்பிருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 




இந்த சூழலில் இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கை நேரில் சந்தித்து மேலும் ஒரு புகார் மனுவை அளித்த நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் தலைமையில் அக்கட்சியினர் பேராசிரியர் ஜெயராமன் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்யவேண்டும் நாம் தமிழர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்து தெரிவிக்கும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த போக்கினை அவர்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் மயிலாடுதுறை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என்று பேராசிரியர் ஜெயராமன் மீது மேலும் கடுமையான வழக்குகளை பதிவுசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மயிலாடுதுறை: அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே மோதல் - தந்தை மகன்கள் உட்பட 3 பேர் கைது


இந்நிலையில், இதுதொடர்பாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேராசிரியர் த.ஜெயராமன் கூறுகையில், சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் தமிழ் தேசியம் குறித்து பேசுகையில், யார் பெயரையோ, எந்த கட்சியின் பெயரையோ குறிப்பிடவில்லை என்றும், தமிழ்தேசியம் குறித்து பேசியதை தனி மனிதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளது வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


பூம்புகாரில் மீண்டும் இந்திரவிழா நடத்த நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதி