சாதாரண மக்கள் வாங்கும் வீட்டு, கல்வி, வாகனங்கள் வாராக்கடன்கள் கிடையாது., வங்கிகளுக்கு ரூ. ஆறுரை லட்சம் கோடி வராக்கடன்கள் வரவேண்டிய உள்ளது. இதில் 80 சதவீதத்திற்கு மேல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வரவேண்டிய கடன்கள் உள்ளது மத்திய அரசு வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.  இதனை கண்டித்தும், எதிர்த்தும், வேலை நிறுத்தப்போராட்டமும், மத்திய அரசை கண்டித்தும், இந்தியாவிலுள்ள வங்கிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒன்பது அகில இந்திய தொழிற்சங்கள் யுனைடெட் போரம் ஆப் பேங்க் யூனியன்கள் என்ற பெயரில் ஒன்றிணைத்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் தங்க தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய ஒவர்ஸீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவிப்பொது செயலாளர் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் சொக்கலிங்கம், குருநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ட கோஷங்களிட்டனர்.




இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை வங்கியின் பங்குகளை  அதிக விலைக்கு செல்லும் என்பதை யாரும் மறுக்க  முடியாது. அரசின் மக்கள் நலன் சார்ந்த அனைத்து திட்டங்களையம் மக்களிடம் கொண்டு செல்லும் மகத்தான பணியை வங்கிகள் செய்து வருகின்றன. வங்கித்துறையில் 80 சதவீதக்கிற்கும் மேற்பட்ட வாராக்கடனை 50 நிறுவனங்கள் வைத்துள்ளன. கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் வராராக்கடனை வசூல் செயாயாமல், பொதுத்துறை வங்கிகளை அவசியமின்றி தனியார் மயாக்கும் மத்தியஅரசின் முடிவை எதிர்த்தும், கண்டித்தும், தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி ஊழியர்களான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.




இது குறித்து தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் கூறுகையில்,இந்தியா முழுவதும் பத்தரை லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், 2021 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. 1964 இந்திய பொருளாதார வளர்ச்சியில் பொது துறை வங்கிகள் தான் மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளன. பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து லாபத்தில் மட்டும் தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அரசின் தவறான அனுகுமுறை காரணமாக, உதாரணத்திற்கு சாதாரண மக்கள் வாங்கும் வீட்டு, கல்வி, வாகனங்கள் வாராக்கடன்கள் கிடையாது., வங்கிகளுக்கு ரூ. ஆறுரை லட்சம் கோடி வராக்கடன்கள் வரவேண்டிய உள்ளது.


இதில் 80 சதவீதத்திற்கு மேல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து வரவேண்டிய கடன்கள் உள்ளது.  அக்கடன்களை வசூலித்த தர வேண்டிய மத்திய அரசு அந்நிறுவனத்தின் மீத கிரிமினல் வழக்கு தொடர்ந்து, மக்களின் பணத்தை  வசூலித்து தரவேண்டும். ஆனால் மத்திய  அரசு அமைதியாக இருந்து, வங்கி துறையை  வீணாகுவதற்கு காரணமாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட தொடர்ந்து பணி செய்த ஒரு துறை வங்கி துறை மட்டும் தான். இதே போல் பணமதிப்பிழப்பின் போதும், தொடர்ந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். மத்திய அரசு பொது மக்களின் பணத்தை, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்ற க்கூடாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.இப்போராட்டத்தில் 35 வங்கிகளில் 800 பெண்கள் உள்பட 6 ஆயிரம் ஈடுபட்டுள்ளனர என்றார்.