"கண்டபடி சுத்தாதப்பா கலெக்டர் ஆக்கி பார்க்கனும்" போதை பொருட்களுக்கு எதிரான கலை நிகழ்ச்சியை மக்களோடு மக்களாக நின்று பார்த்து ரசித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மதுபானம் குடித்தும் கள்ளச்சாராயம் குடித்தும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் கள்ளச்சாராயம் விற்பவர்களையும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்ப்பவர்களையும் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை அடுத்து தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறை தலைவரின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்ப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் கலால் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.




மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்களுக்கு எதிரான தீமைகளை விவரிக்கும் வகையில் நாடகம் பாடல் ஆடல் என பல்வேறு கலை வடிவங்களில் எடுத்து கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொதுமக்களோடு பொது மக்களாக நின்று பார்த்து ரசித்தார்.




போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்சியை வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் பொதுமக்களுடன் பார்த்து ரசித்த ஆட்சியர் கலை நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று கலைக் குழுவினரிடம் கூறிவிட்டு சென்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியில் பாடிய பெண் பாடகர் ஒருவர் கல்லூரியில் மகனை சேர்த்து சிரமப்பட்டு படிக்க வைக்கும் தாய் பாடுவது போன்ற பாடலை பாடும்போது கண்டபடி சுத்தாதப்பா கலெக்டர் ஆக்கி பாக்கனும் என்கிற வரியை பாடும்போது ஆட்சியர் புன்னகைத்தப்படி அதனை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண